தேமுதிக தொடர்ந்து தோல்வி அடைவது ஏன்? – விஜயபிரபாகரன் பதில்

0
69

விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என தெரிவித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தொடர்ந்து தோல்வி அடைவது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

விஜயகாந்த் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளார் என தெரிவித்த விஜயகாந்த் மகன் விஜயபிரபாகரன் தேமுதிக தொடர்ந்து தோல்வி அடைவது ஏன் என்பதற்கான விளக்கத்தையும் அளித்திருக்கிறார்.

மதுரை முனிச்சாலை பகுதியில் தேமுதிக நிர்வாகி பாலன் இல்லத் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனும் , தேமுதிக இளைஞரணி செயலாளருமான விஜய பிரபாகரன் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது ,
“விஜயகாந்த் உடல்நல பரிசோதனைக்காக மட்டுமே வெளிநாடு சென்றுள்ளார். தற்போது நல்ல உடல் நலத்துடன் உள்ளார்.

பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில் மாணவர்கள் , பெற்றோர்கள், பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும், உள்ளாட்சி தேர்தலில் தேமுதிக நிச்சயமாக போட்டியிடுவதற்கான முடிவை தலைவர் வந்தவுடன் அறிவிப்பார் எனவும் தெரிவித்தார்.

தேமுதிக தொடர் தோல்வி ஏன்?

தொடர்ச்சியாக தேமுதிக தோல்வியை சந்திப்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த விஜய பிரபாகரன், அரசியலில் வெற்றி தோல்வி என்பது அனைத்து கட்சிகளுக்கும் சகஜம், கடந்த ஆட்சியின் போது அதிமுகவில் பெரிய ஆளாக இருந்த சிலர் தற்போது என்ன ஆனார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும்.

Also Read: காபுலை விட்டு கடைசியாக வெளியேறும் முன் அமெரிக்க படையினர் செய்த ராஜதந்திரம் – தாலிபான்கள் அதிர்ச்சி!

முன்பை விட பின்னடைவாக உள்ளோம் என்பதை உணர்ந்துள்ளோம், தேமுதிக தொடங்கியதற்கான இலக்கை அடையும் வகையில் இனி செயல்படுவோம்,

திமுக ஆட்சியின் செயல்பாடுகள் குறித்த கேள்விக்கு பதில் அளித்தபோது, விமர்சனம் சொல்ல 6மாத காலமாவது ஆட்சி முடிய வேண்டும், இதுவரை திமுக ஆட்சியின் செயல்பாடு சிறப்பாக உள்ளது, அனைத்து சாதி அர்ச்சகர் ஆகலாம் என்ற அறிவிப்பை வரவேற்கின்றோம் என்றார்.